”மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று செயல்பட நடவடிக்கை” - டிவிட்டர்
மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்று அதன்படி செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயனாளர்களின் குறைகளை தீர்க்கும் விதத்தில் உள்நாட்டிலேயே அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதனை ஏற்க டிவிட்டர் நிறுவனம் மறுத்ததால் மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், பயனாளர்களின் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஒப்பந்த அடிப்படையில் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments