கனடா, ரஷ்யா நாடுகளில் தெரிந்தது கங்கண சூரிய கிரகணம்..! இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், லடாக்கில் சிறிது நேரம் தென்பட்டது
நடப்பாண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து போன்ற நாடுகளில் முழுமையாக தெரிந்தது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வந்து சூரியனை மறைக்கும் நிகழ்வே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்காது என்பதால் சூரியன் மறையாத பகுதிகள் ஒளி வட்டமாக நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும்.
இது கங்கண கிரகணம் என்றழைக்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகலில் தொடங்கிய சூரிய கிரகணம், கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் முழுமையாக தெரிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
Comments