தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவில் 8 பேர் உறுப்பினர்களாக நியமனம்...

0 4222

தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 8 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வால் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆராயவும், அனைவரும் பயன்பெறத் தக்க மாணவர் சேர்க்கை முறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்கள், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு ஒரு மாதத்திற்குள் பரிந்துரைகளை அளிக்கும் எனவும், அதன்படி அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments