கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதை நிறுத்தக் கோரிய வழக்கு; தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 3257
கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதை நிறுத்தக் கோரிய வழக்கு; தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ல்லணைக் கால்வாயில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும் வண்ணம் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதை நிறுத்தக் கோரிய வழக்கில், தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில், கால்வாயில் கான்கிரீட் தளத்தின் அளவு உயர்த்தப்படுவதால், முழு கொள்ளளவான 4,200 கனஅடி நீர் கால்வாயில் செல்ல முடியாது என்றும், வெள்ளத்தைத் தாங்கும் திறன் இல்லாமல் உடைப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது,கான்கிரீட் தளங்களின் இடையே நீர் செல்வதற்கான குழாய்கள் அமைக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு நீர்வள ஆதார திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments