தடுப்பூசியால் எத்தனை காலம் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு திறன் கிடைக்கும்? :தடுப்பூசி 2 டோசுகளுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் போட ஆதரவு குரல்கள்.!

0 4972
தடுப்பூசியால் எத்தனை காலம் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு திறன் கிடைக்கும்? :தடுப்பூசி 2 டோசுகளுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் போட ஆதரவு குரல்கள்.!

டுப்பூசி மூலம் பெற்ற கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு திறன் சிலருக்கு நீண்ட காலமும், சிலருக்கு குறைந்த காலமும் நீடிக்கும் என்பதால், மூன்றாவதாக ஒரு பூஸ்டர் டோசுக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன.

இரண்டு டோசுகள் போட்ட 12 மாதங்களுக்குள் ஒரு பூஸ்டர் டோசை போட வேண்டிய தேவை ஏற்படும் என ஃபைசர் நிறுவனத்தின் சிஇஓ ஆல்பர்ட் பவுர்லா தெரிவித்துள்ள நிலையில், பூஸ்டர் டோசை போடுவதற்கான அனுமதியை கோவேக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் பெற்றுள்ளது.

பூஸ்டரை போட வேண்டும் என பிரபல வைராலஜிஸ்டான ஜேக்கப் ஜானும் கூறியுள்ளார். கொரோனா வைரசானது, B.1.351, B.1.617.2 போன்ற புதிய வடிவங்களை எடுத்து வேகமாக பரவுவதால் தற்போதுள்ள தடுப்பூசிகளால் 60 முதல் 88 விழுக்காடு தடுப்புத் திறனை மட்டுமே வழங்க இயலும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே புதிய மரபணு மாற்ற வைரசுகளை சமாளிக்க பூஸ்டர் டோஸ் தவிர்க்க முடியாதது என கூறப்படுகிறது. பூஸ்டர் டோசால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நீடிப்பதுடன், புதிய மரபணு மாற்ற வைரசுகளின் தாக்குதலையும் சமாளிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments