தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஜூன் 12 முதல் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்பச் சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 12, 13, 14 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும், ஒருசில உள் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக ஜூன் 13 வரை தெற்கு வங்கக் கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
Comments