ஊரடங்கு விதியை மீறி ஆட்டோவில் பயணம்: அமைச்சர்கள், எம்.பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-எல்.முருகன்

0 8106

ஊரடங்கு விதியை மீறி ஆட்டோவில் பயணம் செய்த தமிழ் நாட்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், பொதுமக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ராகுல் காந்தி மற்றும் ப. சிதம்பரம் ஆகியோர் தடுப்பூசி பற்றிய அவதூறு பரப்பி வந்தார்கள் என்ற முருகன், ஆனால் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு என்று குறை மட்டுமே அவர்கள் கூறி வருகிறார்கள் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments