அருணாசலப் பிரதேசத்தில் அரிசி இலவசம் என அறிவித்ததால் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள்

0 3309
அருணாசலப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இருபது கிலோ அரிசி இலவசம் என அறிவித்துள்ளதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இருபது கிலோ அரிசி இலவசம் என அறிவித்துள்ளதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வூட்ட அரசு பல்வேறு முறைகளைக் கையாண்டு வருகிறது. எனினும் தவறான வதந்திகளால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் சுபன்சிறீ மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு 20 கிலோ அரிசி இலவசம் என அறிவித்துள்ளனர். இதையடுத்துப் பொதுமக்களில் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதாக இந்த ஆலோசனையை அரசுக்குக் கூறிய அதிகாரி தோங்டாக் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments