தடுப்பூசிகளின் விலையை குறைக்க சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
தடுப்பூசி கொள்முதல் கொள்கையை மாற்றி அமைத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசிகளின் விலையை குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக்குடன் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் மத்திய அரசிடம் டோசுக்கு தலா 150 ரூபாய் என்ற கட்டணத்தை வசூலிக்கின்றன. திருத்தப்பட்ட கொள்முதல் திட்டத்தின் அடிப்படையில் இது மறுபரிசீலனை செய்யப்படும் எனவும், அதற்கான அளவீடுகளை மத்திய அரசு இறுதி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 21 ஆம் தேதியில் இருந்து நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி தடுப்பூசி நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளின் 75 சதவிகிதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
Comments