2019 - 2020 நிதியாண்டில் 785 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை

0 4360
2019 - 2020 நிதியாண்டில் பாஜக 785 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2019 - 2020 நிதியாண்டில் பாஜக 785 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகள் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலான தொகையைத் தொழிலதிபர்கள், நிறுவனங்களிடம் நன்கொடையாகப் பெற்றிருந்தால் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

2019 - 2020 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பாஜக மொத்தம் 785 கோடியே 77 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாகவும், ஒரேயொரு தேர்தல் அறக்கட்டளை மூலம் 217 கோடியே 75 லட்ச ரூபாயைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி 139 கோடி ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 59 கோடியே 94 லட்ச ரூபாயும் நன்கொடையாகப் பெற்றுள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் 8 கோடியே 8 லட்ச ரூபாயும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 கோடியே 69 லட்ச ரூபாயும் நன்கொடை பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments