மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வந்தால் 15 நாட்கள் வரை சிறப்பு விடுப்பு
மத்திய அரசு ஊழியர்களின் பெற்றோருக்கோ அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டால், அந்த ஊழியர்கள் 15 நாட்களுக்கான சிறப்பு விடுப்பைப் பெற முடியும்.
கொரோனா தொற்று காலத்தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை அளித்து வருகிறது. அந்த வகையில் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அளித்துள்ள ஒரு உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கான சிறப்பு நேர்வு விடுப்பைப் பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
Comments