18 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க கூடாது: மத்திய சுகாதார துறை

0 3392

18 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொரோனா சிகிச்சையில் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்க கூடாது என மத்திய சுகாதார துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வழிகாட்டல் நெறிமுறைகளில், இந்த மருந்தை 18க்கும் குறைவான வயதினருக்கு வழங்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று கொரோனா தொற்று பாதித்த 18 வயதினருக்கும் குறைவான பிரிவினருக்கு நெஞ்சக சிடி ஸ்கேன் சோதனையை அவசியம் இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முககவசம் அணிவிக்க கூடாது என்றும், 6 முதல் 11 வயதுடையவர்கள் பெற்றோர் அல்லது மருத்துவர்களின் கண்காணிப்பில் மட்டுமே முககவசம் அணிய வேண்டும் எனவும் வழிகாட்டல் நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments