ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

0 6591

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரிவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு உள்ளது. பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா கூட்டாக இணைந்து 6-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார்.

அதேபோல் ஆல்-ரவுண்டர் தரிவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பாததால் தரவரிசையில் தொய்வு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments