கொரோனாவுடன் பத்து நாட்களாகப் போராட்டம்.... குணமடைந்து தனது முதல் குழந்தையை கையில் ஏந்திய இளம் பெண் மருத்துவர்: நெகிழ்ச்சி சம்பவம்
மேற்கு வங்கம் ஹவுராவைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் மருத்துவர் கொரோனாவுடன் பத்து நாட்களாகப் போராடி தனது முதல் குழந்தையை கையில் எடுத்தபோது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நிறை மாத கர்ப்பிணியாக இருந்த டாக்டர் ஆர்பாவுக்கு ARFA கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார். அவருடைய நிலைமை மோசமாக இருந்ததால் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தையைப் பரிசோதித்ததில் அதற்கு நெகட்டிவ் வந்த போதும் தாயை விட்டு பிரித்து வைக்கப்பட்டது.
பத்து நாட்களாக போராடி கொரோனாவில் இருந்த மீண்ட ஆர்பாவின் கையில் அவர் பெற்ற குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
Comments