சட்டத்தின் கண்முன் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது - டெல்லி நீதிமன்றம்

0 2998

சட்டத்தின் கண்முன் எல்லோரும் சமம் எனவும் ஏழை, பணக்காரன், சாதி, மதம் என குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதைக் கொண்டும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படமாட்டாது என்றும் டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சக மல்யுத்த வீரரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு டெல்லி சிறையில் இருக்கும் மல்யுத்த வீரர், ஒலிம்பிக் சாம்பியன் சுஷில் குமார், உடலை பராமரிக்க தனக்கு சிறப்பு உணவுகள் வேண்டும் எனக் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சத்வீர் சிங் லம்பா, குற்றம்சாட்டப்பட்டவர் விரும்பும் உணவை கொடுக்கலாம் என்று சட்டத்தில் இடமிருந்தாலும் அது கட்டாயமில்லை என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments