பிரஞ்சு ஓபன் டென்னிஸ் அரைஇறுதி: நடால்- ஜோகோவிச் மோதல்

0 3693

களிமண் தரையில் விளையாடப்படும் கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரஞ்சு ஓபன் டென்னிசில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

பாரீசில் நடந்த கால் இறுதி ஆட்டத்தில் செர்பிய சாம்பியன் ஜோகோவிச், இத்தாலி இளம் வீரர் மேட்டோ பிரட்னீயை எதிர்கொண்டார். பலம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் இறுதியில் 6-க்கு 3, 6-க்கு 2, 6-க்கு 7, 7-க்கு 5 என்ற செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் ஜாம்பவான் ரபெல் நடால் 6-க்கு 3, 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 0 செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் டிகோ ஸ்காவெர்ட்ஸ்மேனை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் நம்பர் ஓன் வீரர் ஜோகோவிச், நடப்பு சாம்பியன் ரபெல் நடாலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments