முன்னெப்போதும் இல்லாத அளவாக நடப்பாண்டில் 418 லட்சம் டன் கோதுமை கொள்முதல்: மத்திய அரசு தகவல்
இதுவரை இல்லாத அளவாக 418 லட்சம் டன் கோதுமையை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய ராபி பருவத்தில் உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் இருந்து கோதுமை கொள்முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
418 லட்சம் டன் கொள்முதல் செய்ய, 46 லட்சம் விவசாயிகளுக்கு 83 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Comments