கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை... 12 மணி நேரத்தில் குணமடைந்த 2 கொரோனா நோயாளிகள்

0 21838

டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறையால் கொரோனா நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி எனப்படும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர்.

ஏற்கனவே இந்த சிகிச்சை முறை எபோலோ ஹெச்ஐவி போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. REGCov2 டோஸ்கள் செலுத்தப்பட்ட அந்த நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்தனர். இந்த சிகிச்சை முறையை சரியான வகையில் பயன்படுத்தினால் கொரோனாவுக்கு எதிரான மருத்துவத்தில் புதிய திருப்புமுனையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments