டிக்டாக், வி-சாட்டிற்கு எதிராக டிரம்ப் விதித்த தடையை ரத்து செய்தார் ஜோ பைடன்
அமெரிக்காவில் டிக் டாக் மற்றும் வீ சாட் பதிவிறக்கம் குறித்து முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த தடைகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் டிக் டாக் மற்றும் வீ சாட் அப்ளிக்கேஷ்ன்களை பொது மக்கள் புதிதாக பதிவிறக்கம் செய்வது மற்றும் பயன்படுத்துவது குறித்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த தடைகள் திரும்பப் பெறுவதாக அதிபர் பைடன் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வர்த்தகப் பிரிவு மற்றும் பிரத்யேக பாதுகாப்பு குழு அப்ளிக்கேஷன்கள் பயன்படுத்துவது குறித்த பாதுகாப்பு அம்சங்களை ஆராய உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே டிரம்பின் தடை உத்தரவுக்கு உள்ளூர் நீதிமன்றங்கள் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments