தமிழகத்தில் 18,000க்கும் கீழ் சரிந்த கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 321 பேருக்கு, புதிதாக வைரஸ் தொற்று உறுதியானது. 21 வயது தர்மபுரி இளம்பெண், 96 வயது சென்னை முதியவர் உள்பட ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றுக்கு 405 பேர் பலியாகியினர்.
நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்து, ஒரே நாளில் 31 ஆயிரத்து 253 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கோவையில் 2ஆயிரத்து 319 பேரும், ஈரேட்டில் ஆயிரத்து 405 பேரும், சென்னையில் ஆயிரத்து 345 பேரும், திருப்பூரில் 913பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மாநிலம் முழுவதிலும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 258 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Comments