ஜூன் 21 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது -சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

0 4011

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை வருகிற 21 ஆம் தேதி கூடுகிறது. சென்னை - கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு கூட்டம் துவங்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சென்னை - தலைமைச் செயலகத்தில் மாலையில் செய்தியாளர்களை சந்தித்து, பேரவை கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, வருகிற 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் பேரவை கூடும் என அவர் அறிவித்தார்.

பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அப்பாவு, நெகட்டிவ் என சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றார். பேரவையில் அனைத்து கட்சிகளுக்கும் சம அளவில் வாய்ப்பு அளித்து, ஜனநாயக நெறிமுறைப்படி,
முறையாக, பேரவை நடத்தப்படும் என அப்பாவு உறதி அளித்தார்.

பேரவை எத்தனை நாள் கூடும் ? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அலுவல் ஆய்வுக்குழு கூடி, முடிவு செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர்அப்பாவு பதில் அளித்தார். ஆளுநர் உரையில் பல முக்கிய அறிவிப்புகளும், சலுகைகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments