2-DG மருந்து தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்..! டிஆர்டிஓ அறிவிப்பு

0 3744

கொரோனா சிகிச்சை இணை மருந்தான 2-DG மருந்தை , பெருமளவில் தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

அப்படி ஆர்வம் தெரிவிக்கும் நிறுவனங்களில் மொத்தம் 15 இந்திய மருந்து நிறுவனங்களுக்கு மட்டும் இந்த மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2-டிஆக்சி-டி. குளுக்கோஸ் என்ற பவுடர் வடிவிலான இந்த மருந்து, கொரோனா நோயாளிகள் விரைவாக குணமடையவும், மருத்துவ ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவும் என கிளினிகல் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2-DG மருந்துக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியும் வழங்கி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments