சென்னையில் குறையும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை

0 3951

சென்னையில் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 16 ஆயிரமாக குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 1587 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

சென்னையில் 3 வாரங்களுக்கு முன்பு நாளொன்றுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் அது இப்போது 1500 க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் நேற்று ஒரு நாளில் 1437 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. சென்னையில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.19 லட்சமாக உள்ள நிலையில், 4.95 லட்சம் பேர் குணமடைந்தனர், 7,560 பேர் பலியாகினர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments