டெல்டா, பீட்டா மரபணு மாற்ற வைரசுகளிடம் இருந்து கோவேக்சின் பாதுகாப்பு அளிப்பது உறுதி.. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக், புனே தேசிய வைராலஜி கழகம் ஆய்வு
ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக், புனே தேசிய வைராலஜி கழகம் ஆகியன சேர்ந்து நடத்திய ஆய்வில், டெல்டா, பீட்டா மரபணு மாற்ற வைரசுகளிடம் இருந்து கோவேக்சின் பாதுகாப்பு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமான 20 பேரிடமும், கோவேக்சினின் 2 டோசுகளையும் போட்ட 17 பேரிடம் 28 நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த ஆய்வு முடிவை இதர விஞ்ஞானிகள் இதுவரை சரிபார்க்கவில்லை.
இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு டெல்டா மரபணு மாற்ற வைரஸ் காரணமாக உள்ளது.
இதனிடையே சுகாதாரப் பணியாளர்களிடம் நடத்திய மற்றோர் ஆய்வில், கோவேக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி கூடுதலான ஆன்டிபாடீசுகளை உருவாக்குவது தெரியவந்துள்ளது.
Comments