கேரளாவில் ஒரு மாதத்திற்குப் பின் பேருந்துப் போக்குவரத்து தொடக்கம்
கேரளாவில் அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு தொலை தூர சேவைக்கான பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது. இதனையடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் தமிழக கேரள எல்லை பாறசாலை பணிமனையில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Comments