முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநருடன் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்திலுள்ள கொரோனா பாதிப்பு நிலவரங்கள், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சட்டப்பேரவை கூட்டம் விரைவில் கூடவுள்ள நிலையில், அதுகுறித்தும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
Comments