இந்தியாவில் மேலும் 92ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா

0 3349

24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 23 பேருக்கும், அதற்கு அடுத்து கேரளாவில் 15 ஆயிரத்து 567 பேருக்கும் புதிதாக தொற்று பாதித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமாகி  ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 664 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 219 ஆக பதிவாகி உள்ளது.

12 லட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் நோய் தொற்று பாதித்து மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரத்து 360 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments