சுத்தம் செய்யப்படாத ஏ.சி.எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்
சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து யூகோவ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அறைகளுக்குள் ஏ.சி எந்திரங்களை சரியாக தூய்மை செய்யாவிட்டால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமாக பராமரிக்கப்படும் ஏ.சி எந்திரங்களால் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளியில் உள்ள பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை விட ஏ.சி. எந்திரத்தில் அதிக அளவில் சேரும் கிருமிகள் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏ.சி. எந்திரங்களை அவ்வப்போது சுத்தம் செய்து தரமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Comments