இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்
இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இவரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவரது பணி நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த இவர், ஓய்வுக்கு பின்னர் தற்போது மாநில கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
சுனில் அரோரா ஓய்வுபெற்றதை அடுத்து தேர்தல் ஆணையர் பதவியில் ஒரு இடம் காலியாக இருந்தது. தேர்தல்ஆணையராக இருப்பவர்கள் 65 வயது வரையோ அல்லது 6 ஆண்டுகளோ பதவியில் நீடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments