கொரோனா தடுப்பு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு..!
கொரோனா தடுப்பு பொருட்களான முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை பயன்படுத்தி மாஸ்க், சானிடைசர்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில், 200 மில்லி லிட்டர் அளவு கொண்ட கிருமி நாசினி பாட்டில் 110 ரூபாய்க்கும், ஒரு N95 முகக்கவசம் 22 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும்.
அதேபோல் கையுறை 15ரூபாய்க்கும், பி.பி.இ.கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை 273ரூபாய்க்கும், சர்ஜிக்கல் மாஸ்க் 3ரூபாய் முதல் 4ரூபாய்க்கும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் உடை அதிகபட்ச விலை 65 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரிபார்க்கும் பல்ஸ் ஆக்சிமீட்டர் 1500 ரூபாய்க்கும், பேஸ் ஷீல்டு எனப்படும் முகத்திரை 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.
Comments