மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோவில் கைது

0 3986
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோவில் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பத்ம ஷேசாத்ரியை தொடர்ந்து, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ஆனந்தன் மீது சமூக வலைதளங்களில் பாலியல் புகார் எழுந்தது. இதையடுத்து ஆனந்தனை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. காவல் துறைக்கு நேரடியாக எழுத்துப்பூர்வமான புகார்கள் வராததால் ஆசிரியர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு அடுத்தகட்ட நகர்வின்றி இருந்தது.

இந்நிலையில், ஆசிரியர் ஆனந்தனால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரில் அவனை போக்சோவில் கைது செய்தனர்.

விசாரணையில், செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்களை வைத்து மாணவிகளை மிரட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

தனது பாலியல் இச்சைக்கு இணங்கவில்லை என்றால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை போடமாட்டேன் என்றும், பெயில் ஆக்கிவிடுவேன் எனக்கூறியும் ஆனந்தன் மிரட்டி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments