கொரோனா நோயாளிகளுக்கு தலைவாரி, முகச்சவரம் செய்துவிடும் செவிலியர்கள்... பல்வேறு தரப்பினரும் பாராட்டு

0 6629

ஒடிசாவில் சிகிச்சை பெற்றும் வரும் கொரோனா நோயாளிகளுக்கு செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தலை வாரி விடும் மற்றும் முகச்சவரம் செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரம்மபூரில் உள்ள மகாராஜா கிருஷ்ண சந்திர கஜபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு செவிலியர்கள் முகச்சவரம் செய்வது மற்றும் பெண்களுக்கு தலை வாரிவிடுவது போன்ற வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதை அடுத்து பல்வேறு தரப்பினரும் செவிலியர்களின் சீர்மிகு சேவையை பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments