ஐ.நா.பொதுச்சபையின் தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் தேர்வு
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மாய் ரசூல் எதிர்த்துப் போட்டியிட்டார்.
இதையடுத்து நடந்த தேர்தலில் அப்துல்லா ஷாகித்துக்கு 143 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஐநா சபையின் 76வது தலைவராக அப்துல்லா ஷாகித் பொறுப்பேற்கிறார். வெற்றி பெற்ற அவருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கள் உள்ளிட்டவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
Comments