கனடாவில் பரவும் மர்மமான மூளை நோய்..! 48 பேரை நோய் பாதித்ததில் 6 பேர் உயிரிழப்பு
கனடாவின் நியூ பிரன்ஸ்விக்கில் பரவும் மர்மமான மூளை நோய் அங்குள்ள மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நோய் எப்படி, எங்கிருந்து தோன்றியது, எந்த விதமான நோய் என புரியாமல் அங்குள்ள நரம்பியல் மருத்துவர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இந்த நோய் 48 பேரை பாதித்ததில் 6 பேர் உயிரிழந்து விட்டனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை, நினைவுத் திறன் குறைதல் மற்றும் பார்வையில் மாயத்தோற்றம் ஆகிய அறிகுறிகள் காணப்படுகின்றன. பலர் ஏற்கனவே இறந்து போனவர்களை காண்பதாக கூறி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிரியக்கம் தான் இதற்கு காரணம் என பல மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணமாக இருக்கலாம் என ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
Comments