சீனாவில் புதிய பிறப்பு கொள்கை உய்குர் முஸ்லிம் இன மக்களின் பிறப்பு விகிதத்தை குறைக்கக்கூடும்; ஆய்வில் தகவல்
சீனாவின் குழந்தை கட்டுப்பாடு கொள்கையானது உய்குர் முஸ்லிம் இன மக்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலை செய்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவருகிறது. இந்நிலையில் சீனாவின் மூன்று குழந்தை வரை பெற்றுக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாடானது 20 ஆண்டுகளில் உய்குர் சிறுபான்மையினரின் பிறப்புகளை 40 லட்சம் வரை குறைக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 2017 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உய்குர் இனத்தவர்களின் பிறப்பு விகிதங்கள் 48.7% குறைந்த நிலையில், அடுத்த 20 ஆண்டுகளுக்குள் 26 லட்சம் முதல் 40 லட்சம் வரை குறைத்துவிடக்கூடும் என ஜெர்மன் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
Comments