கொழும்பு அருகே கடலில் தீப்பிடித்து எரிந்த இராசயன சரக்கு கப்பல்..! கடற்கரைகளில் அரிய உயிரினங்கள் ஒதுங்கின

0 3158

ராசயனப் பொருட்கள் ஏற்றி வந்த சிங்கப்பூர் சரக்கு கப்பலான X-Press Pearl இலங்கை கடலில் தீப்பிடித்து எரிந்ததன் விளைவாக 10 க்கு மேற்பட்ட ஆமைகள், டால்பின், மீன்கள் மற்றும் பறவைகளின் உடல்கள் கடற்கரைகளில் ஒதுங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கடல்வாழ் உயிரினங்களின் இறப்புக்கு என்ன காரணம் என விசாரணை நடப்பதாக இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கில் உள்ள புத்தளம் கடற்கரை முதல் தெற்கில் உள்ள மிரிஸா கடற்கரை வரை கடல் உயிரினங்களின் உடல்கள் காணப்படுகின்றன.

உனவத்துனா கடற்கரையில் காயங்களுடன் இரண்டு ஆமைகள் காணப்பட்டன. இது குறித்து நடக்கும் விசாரணையில்,கப்பலின் தீ விபத்துக்கும் கடல் வாழ் உயிரினங்களின் இறப்புக்கும் தொடர்பு உள்ளதா என ஆராயப்படும் என கூறப்படுகிறது.

தெற்கு மற்றும் மேற்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடிக்க இலங்கை மீன்வளத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments