குறைந்த விலையில் உயர்தர 3 வகையான வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை உருவாக்கி இஸ்ரோ சாதனை..!

0 4209

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவும் விதமாக, குறைந்த விலையில் உயர்தர 3 வகையான வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இஸ்ரோ நிறுவனம் குறைந்த செலவில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய பிரானா, வாயு, ஸ்வஸ்தா ஆகிய 3 வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளது.

ஒவ்வொரு வெண்டிலேட்டர்களும் பயனாளர்களுக்கு ஏற்றவாறு, முழுமையான தானியங்கி திறன் கொண்டு செயல்படும் வகையிலும், தொடுதலின் மூலம் செயல்படுத்தும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வெண்டிலேட்டர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மற்ற மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments