மேற்கு வங்கத்தில் ஆளுநர் - திரிணமூல் உரசல் வலுவடைகிறது
மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரசுக்கும், ஆளுநர் ஜக்தீப் தங்காருக்கும் இடையையான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த திரிணமூல் எம்பி மகுவா மோத்ரா, ஆளுநரின் கடமைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளுமாறு டுவிட் செய்து பரபரப்பை அதிகரித்துள்ளார்.
ஆளுநரை அங்கிள் ஜி என அழைத்துள்ள அவர், ஆளுநரின் உறவினர்கள் 6 பேர், கொல்கத்தா ராஜ் பவனில் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்.
தலைமைச் செயலராக இருந்து, பின்னர் மாநில அரசின் தலைமை ஆலோசகராக அலபான் பந்தோபாத்யாயா நிமிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 6 சிறப்பு அதிகாரிகளை ஆளுநர் நியமித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் இந்த 6 பேரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தமது உறவினர்கள் இல்லை என்றும் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.
Comments