இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சமாக குறைந்தது
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு சுமார் 1 லட்சமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் பெருந்தொற்றக்கு 2 ஆயிரத்து 427 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை சுமார் 14 லட்சமாகக் குறைந்துள்ளது.
மாநில வாரியாக ஒருநாள் கொரோனா தொற்று அடிப்படையில், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 14 ஆயிரத்து 672 பேருக்கு உறுதியாகி கேரளா இரண்டாமிடத்திலும், 12 ஆயிரத்து 557 பேருக்கு உறுதியாகி மகாராஷ்டிரா மூன்றாமிடத்திலும், 12 ஆயிரத்து 209 பேருக்கு உறுதியாகி கர்நாடகம் 4ஆம் இடத்திலும், 8 ஆயிரத்து 976 பேருக்கு உறுதியாகி ஆந்திரா 5ஆம் இடத்திலும் உள்ளன.
புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 68.4 சதவீதம் இந்த 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள். நாட்டில் இதுவரை 23 கோடியே 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Comments