3 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

0 14857
3 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

சென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க்ஆப் இந்தியா ஆகிய பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அதன் முதல் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.2021-22 நிதியாண்டில் மத்திய அரசு பங்குகள் விற்பனை மூலமாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக்கால் சென்ட்ரல் பேங்க், ஐஓபி ஆகிய இரு வங்கிகளின் பங்குகள் விற்பனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மதிப்பு முறையே 44 ஆயிரம் கோடி மற்றும் 31 ஆயிரம் கோடியாகும். இந்த வரிசையில் பேங்க் ஆப் இந்தியாவும் இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments