பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து ஸ்விஸ் வீரர் பெடரர் விலகல்

0 4226

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.

20 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற அவர் கடந்த ஆண்டு கால் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டு 17 மாத இடைவெளிக்கு பின் களமிறங்கினார். இந்த நிலையில் நடப்பு பிரஞ்சு ஓபனில் ஆரம்பம் முதலே தடுமாறிய பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் லண்டனில் தொடங்க உள்ள விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கலந்து கொண்டு பட்டம் வெல்வதே தன் இலக்கு என்றும் அதற்கு முன் சற்று ஓய்வு பெற பிரஞ்சு ஒபனில் இருந்து விலகுவதாக பெடரர் தெரிவித்து உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments