அடங்காத மாப்பிள்ளை யானை மேல அம்பாரி... ஊருக்கு அடங்கா திருமணம்..!

0 18666
அடங்காத மாப்பிள்ளை யானை மேல அம்பாரி... ஊருக்கு அடங்கா திருமணம்..!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை, சமூக இடைவெளியையும், முககவசத்தையும் மறந்து 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் புடைசூழ, யானை மீது அமர்ந்த மாப்பிள்ளை ஊர்வலத்துடன், ஆலங்குளத்தில் தடபுடலாக நடத்தப்பட்ட  திருமணத்தால் சர்ச்சை உருவாகி உள்ளது

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த ஞாயிற்றுக்கிழமை செண்டைமேளம் முழங்க ... உற்றார் உறவினர்கள் புடை சூழ.... யானையில் மாப்பிள்ளை ஊர்வலம்..! என ஆலங்குளம் அருகே நடந்த பைனான்சியர் மகனின் ஆடம்பரமான திருமணக்காட்சிகள் தான் இவை..!

 தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தை அடுத்த காசியாபுரம் பைனான்சியரும் வியாபாரிகள் நலச்சங்க செயலாளருமான ஆறுமுக பாண்டியன் - பன்னீர் செல்வம் தம்பதியரின் மகன் திபாஸ்கர் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதி இருந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் வருவதாக திருமண பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்ததால் அந்த பக்கம் போலீசாரோ, வருவாய் துறை அதிகாரிகளோ தலைகாட்டவில்லை.

உள்ளூர் வெளியூரில் இருந்து உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளையை யானை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். ஆலங்குளத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்த போதும், காசியாபுரத்தில் ஊரடங்கை தள்ளிவைத்து விட்டு முககவசம் ஏதும் அணியாமல் திரண்ட மக்கள் திருமணம், விருந்து ஆகியவற்றில் சமூக இடைவெளியை மறந்தனர்.

பல இடங்களில் திருமண விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் கொரோனா பரவலுக்கு காரணமாக இருந்திருப்பதை இவர்கள் உணராதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த திருமணம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், நோய் தொற்று பரவும் வகையில் ஆடம்பர திருமண ஏற்பாடுகளை செய்த பைனான்சியர் ஆறுமுக பாண்டியனிடம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments