மத்திய பிரதேசத்தில் கருப்பு பூஞ்சைக்கு மருந்து எடுத்துக் கொண்ட 27 நோயாளிகளுக்கு வாந்தி, லேசான காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்

0 4702
மத்திய பிரதேசத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆம்போடெரிசின் - பி மருந்து எடுத்து கொண்ட 27 நோயாளிகளுக்கு வாந்தி உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆம்போடெரிசின் - பி மருந்து எடுத்து கொண்ட 27 நோயாளிகளுக்கு வாந்தி உள்ளிட்ட  பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆம்போடெரிசின் - பி என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின் - பி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேருக்கு வாந்தி, லேசான காய்ச்சல் உள்ளிட்ட எதிர்வினை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மற்ற நோயாளிகளுக்கும் ஆம்போடெரிசின் மருந்து கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டு, பக்க விளைவுகள் ஏற்பட்ட நோயாளிகளுக்கு மாற்று மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments