வீட்டுத் தனிமையில் இருப்போருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வீடியோவாக வெளியிட்டது சென்னை மாநகராட்சி
சென்னையில் கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்போருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, தனிமைபடுத்தலில் இருக்கும் போது காற்றோட்டமான தனி அறையில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும், தனிக் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். தனிமை படுத்திக் கொண்ட அறையில் மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது.
பாதுகாப்பாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது எப்படி?
தெரிஞ்சிக்கலாமா?#GCC #ChennaiCorporation #HomeIsolation #StaySafe https://t.co/LxiOlP7C5N
தொற்று பாதித்தோர் பிறரிடம் நேரடியாக பேசுவதை தவிர்க்க வேண்டும். நேரடியாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டால் முகக்கவசம் அணிந்து கொண்டு பேச வேண்டும்.
சோர்வு ஏற்படுத்துகிற எந்த வேலைகளை செய்யக்கூடாது. அடிக்கடி பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 94-க்கு கீழ் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என விழிப்புணர்வு வீடியோவில் அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
Comments