கொரோனா 2-வது அலையால் வேளாண் துறையில் பாதிப்பு இல்லை - நிதி ஆயோக் தகவல்
கொரோனா 2-வது அலையால் வேளாண் துறையில் எந்தவித பாதிப்பு இல்லை என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதி ஆயோக்கின் உறுப்பினர் ரமேஷ் சந்த், செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் கிராமப்புறங்களில் பெரும்பாலும் மே மாதத்தில் தான் அதிகளவில் கொரோனா தொற்று பரவியதாகவும், கோடை வெயில் காரணமாக மே மாதத்தில் வழக்கமாகவே விவசாய நடவடிக்கைகள் குறைவாகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால், கொரோனாவின் 2-வது அலையால் வேளாண் துறை பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார். பருப்பு வகை உற்பத்தியில் இந்தியா ஏன் தன்னிறைவு பெறவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவின் மானியம், விலை மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் அரிசி, கோதுமை கரும்பு ஆகியவற்றுக்கே சாதகமாக இருப்பதாக கூறினார்.
Comments