நாட்டில் 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது
ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 72 அமெரிக்க டாலர் என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதால், உள்ளூர் வரிகளுடன் சேர்த்து ராஜஸ்தான், மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகிய இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4ரூபாய்69 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 5ரூபாய் 28 காசுகளும் உயர்ந்துள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் 47 காசுகளுக்கும் டீசல் 90 ரூபாய் 66காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Comments