கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டரில் எந்த நிறுவனமும் பங்கேற்காதது குறித்து ஆய்வு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டரில் எந்த நிறுவனமும் பங்கேற்காதது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தடுப்பூசி வழங்க நிறுவனங்கள் முன்வராததற்கு மத்திய அரசை குறைகூறுவது அபத்தம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மசினகுடி பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
Comments