பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 3 பெண்கள் புகார்
பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 3 வீராங்கணைகள் பாலியல் புகாரளித்துள்ளனர்.
தன்னிடம் பயிற்சிக்கு வரும் வீராங்கனைகளுக்கு பிசியோதெரபி வழங்குவதாக கூறி நாகராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட வீராங்கனை ஒருவர் புகார் அளித்தார்.
இந்த புகாரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போலீசார் அவனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகராஜனை நீதிமன்ற அனுமதியோடு மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாகராஜனால் தாங்களும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக மேலும் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments