தமிழகம் முழுவதும் 847 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிக்கும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கொரோனாவில் குணமடைந்த ஒரு சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி 518ஆக இருந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு தற்போது 847 ஆக அதிகரித்துள்ளது. கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் ஆம்போடெரிசின் - பி என்ற மருந்து தற்போது வரை 2,470 குப்பிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக 30ஆயிரம் மருந்து குப்பிகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொரோனோவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளதா? என சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் கண்காணிக்கவும், மாவட்ட வாரியாக தேவையான சிகிச்சைகளை வழங்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Comments