கடலூரில் ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழா.... போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓட்டம்..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்ற கிராம மக்கள், போலீசாரைக் கண்டதும் தெறித்து ஓடினர்.
மன்னம்பாடி கிராத்திலுள்ள அந்த ஏரியில் ஆண்டுதோறும் நடைபெறும் மீன்பிடித் திருவிழாவில் மன்னம்பாடி, எடையூர், படுகளாநத்தம் உட்பட 10 கிராம மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். இந்த நிலையில் ஊரடங்கை கண்டுகொள்ளாமல் நடப்பு ஆண்டுக்கான மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏரியில் ஒன்றுகூடி மீன்பிடித்தனர்.
தகவலறிந்து போலீசார் வரவே, ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் நான்கு புறமும் தெறித்து ஓடத் தொடங்கினர்.
Comments